தேனுடன் எதனை கலந்து குடிக்கலாம்….அவை தரும் ஆரோக்கியங்கள் என்னென்ன?

Loading...

தேனுடன் எதனை கலந்து குடிக்கலாம்....அவை தரும் ஆரோக்கியங்கள் என்னென்னஎடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் பெற்றுக்கொள்ளலாம்.
100 கிராம் தேனில் உள்ள சத்துக்கள்

கொழுப்பு – 0 %, சோடியம் 4 மி.கி, பொட்டாசியம் 52 மி.கி, பைபர் 0.2 கி, சர்க்கரை 82 கி, கார்போஹட்ரேட் 82 கி, விட்டமின் ஏ, கால்சியம், விட்டமின் டி, விட்டமின் B12, விட்டமின் B-6 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்

பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சுலபமாக நீங்கி விடுகின்றன.

குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும்.

தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும், பசியை அது வளர்க்கும். ஜீரணத்துக்கும் உதவும்.

தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. ஆகவே உடல் மிகவும் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும்.

ரத்தப் பித்தத்துக்கு அதாவது வாய், மூக்கு முதலியவற்றிலிருந்து ரத்தம் வடியும் வியாதிக்கு, ஆட்டின் பாலில் தேனைக் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கம்.

நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமன்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம்.

தேனுடன் எதனை கலந்து குடிக்கலாம்?

1.தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

2. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து குணமாகலாம்.

3. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

4. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

5. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

6. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

7. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

8. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

9. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

10. தேனுடன் பால், எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

தேன் பேஷியல்

தேனில் விட்டமின் ஈ சத்து நிறைந்திருப்பதால், பேஸ் மாஸ்க்குகள் அனைத்திலுமே தேன் சேர்க்கப்படும்.

அதிலும் முதுமைத் தோற்றத்தைப் போக்குவதற்கு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 டீஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை மசாஜ் செய்து குளிர்ந்து நீரில் அலச வேண்டும்.

இதனால் முகம் நன்கு மென்மையாகவும், இளமைத் தோற்றத்துடனும் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply