தினமும் தேன் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்

Loading...

தினமும் தேன் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்இயற்கை நமக்களித்துள்ள மிகப்பெரிய கொடையான தேன் உடலில் ஏற்படும் பல வித நோய்களுக்கும் மருந்தாக விளங்குகிறது.
அத்தகைய தேனை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.

உடல் எடை குறைய

சிலர் உடல் எடையைக் குறைக்க பல முயற்சிகள் செய்யும் பலன் இல்லாமல் தவிப்பார்கள்.

அத்தகையோர் தேனை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்.

எனவே தினமுன் காலையில் வெறும் வயிற்றில் மிதமான சூட்டில் உள்ள நீருடன் தேனைக் கலந்து குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.

இரத்ததில் சக்கரையின் அளவை கட்டுப்படுத்த

மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க நினைப்பவர்கள், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வரவேண்டும்.

மேலும், இனிப்பு வகைகளில் சக்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துங்கள். இதனால் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு சீராக்கப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

மழை மற்றும் பனி காலங்களில் சிலருக்கு விரைவாக நோய்கள் தொற்றிக்கொள்ளும்.

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதே அதற்கு காரணம்.

எனவே, அவர்கள் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து பருகினால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நச்சுப்பொருட்கள்(Toxins) வெளியேற

சில வேளைகளில் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுபொருட்கள்(Toxins) நமது உடலிலே தங்கிவிடக்கூடும்.

இதனால் பல்வேறு உபாதைகளும் ஏற்படக்கூடும். எனவே, சிறிது எலுமிச்சையுடன் தேனை கலந்து பருகிவந்தால் இத்தகைய நச்சுபொருட்கள் எளிதாக வெளியேறும்.

இளமை தோற்றம் பெற

சிலர், குறைந்த வயதிலேயே முகத்தில் முதிர்ச்சி ஏற்பட்டது போல் தோன்றுவர்.

அவர்கள் தேனை தினமும் பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். தேனில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட் முகம் பொலிவு பெற உதவும்.

கேசம் நன்மை பெற

தேனை தடவினால் முடி வெள்ளையாகிவிடும் என்று சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். எனினும் அது உண்மையல்ல.

தற்போது முடிக்கு பயன்படுத்தும் பல விதமான கண்டிஷ்னர்களில் தேன் கலக்கப்படுகிறது என்பதே இதற்கு சான்று.

ஒரு ஸ்பூன் தேனுடன் இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து முடிக்கு பயன்படுத்தலாம்.

இது ஒர் சிறந்த கண்டிஷ்னராக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply