தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

Loading...

தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமாஇதோ சில எளிய வழிகள்!ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் தற்போது பலருக்கு தலைமுடி அதிக அளவில் உதிர்வதால், பலரும் அதை நினைத்து வருத்தப்படுகின்றனர். மேலும் இதன் காரணத்தினாலேயே நிறைய பேர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

உங்களுக்கு தலைமுடி அதிகம் உதிர்கிறதா? அதன் வளர்ச்சியைத் தூண்டி, அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சக்தி வாய்ந்த ஆயுர்வேத வழிகளைப் பின்பற்றி வாருங்கள். இதனால் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

வெண்ணெய்
வாரம் ஒருமுறை வெண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலசி வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

செம்பருத்தி
செம்பருத்தி பூவை அரைத்து நிழலில் உலர வைத்து, பின் அதனை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால், தலைமுடி நன்கு செழித்து வளரும்.

கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம்
கறிவேப்பிலை மற்றும் 4 சின்ன வெங்காயத்தை அரைத்து, அதனை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் அலசினால், முடி உதிர்வது குறைந்து, முடி நன்கு கருமையான வளரும்.

வெந்தயம்
வெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து தலையில் தடவி 1/2 மணிநேரம் கழித்து குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, முடி நன்கு மென்மையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

கடுக்காய், செம்பருத்தி, நெல்லிக்காய்
இந்த மூன்றையும் சரிசம அளவில் எடுத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், முடி நன்கு வளர்வதை நீங்களே காணலாம்.

செம்பருத்தி இலை
செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் ஆரோக்கியம் மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

மூலிகை எண்ணெய்
மருதாணி, செம்பருத்தி, ரோஜா, கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, பின் பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்ச்சி இறக்கி, நன்கு ஊற வைத்து, பின் அதனை தினமும் தலைக்கு தடவி வரை வேண்டும். இப்படி எப்போதுமே செய்து வந்தால், முடி உதிராது. ஆனால் சிலர் மாதம் ஒரு எண்ணெயை மாற்றுவார்கள். இப்படி செய்தால் முடி உதிரத் தான் செய்யும்.

குறிப்பு
ஒருமுறை இயற்கை வழிகளைப் பின்பற்ற ஆரம்பித்தால், அதனை முழு மனதுடன் நம்பி பின்பற்றி வர வேண்டும். மேலும் இயற்கை வழிகளைப் பின்பற்றும் போது, அதனால் சற்று தாமதமாகத் தான் முழு நன்மையையும் பெற முடியும். எனவே பொறுமை காத்து, இயற்கை வழிகளைப் பின்பற்றி, நன்மை பெறுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply