தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை கனடாவில் அறிமுகம் செய்ய மறுத்த LG

Loading...

தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை கனடாவில் அறிமுகம் செய்ய மறுத்த LGமுன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான LG ஆனது கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் LG V10 எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அமெரிக்காவில் அறிமுகம் செய்திருந்தது.
இதேவேளை கனடாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியுள்ளது.

அதாவது குறித்த கைப்பேசியினை கனடாவில் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என அந் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் வலைத்தளம் பதிவு இடப்பட்டுள்ளது.

எனினும் இதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

குறித்த கைப்பேசியானது 5.7 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரை, Qualcomm Snapdragon 808 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மொகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3,000 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Loading...
Rates : 0
ads
VTST BN