தக்காளி ரசம்

Loading...

தக்காளி ரசம்கையால் நன்கு பிசைந்த தக்காளி-1 கப்
புளி- எலுமிச்சம்பழ அளவு
சாம்பார்ப்பொடி- 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
அரிந்த கொத்தமல்லி இலை- ஒரு கை
கறிவேப்பிலை- ஒரு கொத்து
பெருங்காயப்பொடி- 1 ஸ்பூன்
வெந்த பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
தேவையான உப்பு
நெய்- 2 ஸ்பூன்
மிளகு சீரகப்பொடி- 1 ஸ்பூன்

புளியை ஊறவைத்து கெட்டியான சாறு எடுக்கவும்.
அத்துடன் 5 கப் நீர் சேர்க்கவும்.
தக்காளி, காயம், சாம்பார் பொடி, இலைகள், மஞ்சள் தூள், உப்பு, அனைத்தும் அத்துடன் சேர்க்கவும்.
வாணலியில் அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
சீரகம் போட்டு அது வெடிக்கும்போது கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றவும்.
ரசம் நன்கு கொதித்து வரும்போது பருப்பு, மிளகு-சீரகப்பொடி சேர்க்கவும்.
ரசம் மறுபடியும் நுரைத்து வரும்போது இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply