தக்காளி ஓட்ஸ் அல்வா

Loading...

தக்காளி ஓட்ஸ் அல்வாதக்காளி விழுது – ஒரு கப்
ஓட்ஸ் – ஒரு கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
பால் பவுடர் – ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை
பிஸ்தா துருவல் – அரை கப்
உப்பு – சிட்டிகை
நெய் – 2 மேசைக்கரண்டி

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் வெடிக்கும் வரை வைத்திருக்கவும்.

சூடு ஆறியதும் எடுத்து தோல் உரித்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஓட்ஸை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் ஊறிய ஓட்ஸை எடுத்து வடிகட்டியில் பிழிந்து பால் எடுக்கவும்

மிக்ஸியில் சர்க்கரையை போட்டு பொடி செய்துக் கொள்ளவும். பிஸ்தாவை தோல் உரித்து துருவி கொள்ளவும்.

தக்காளி விழுது, ஓட்ஸ் பால், ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்து 5 நிமிடம் மைக்ரோவேவ் ஹையில் வைக்கவும். இடையில் ஒரு முறை எடுத்து கிளறி விடவும்

பின்னர் அதனுடன் பால் பவுடர் சேர்த்து கலந்து மீண்டும் 5 நிமிடம் மைக்ரோவேவ் ஹையில் வைக்கவும்

அதன் பிறகு வெளியில் எடுத்து கிளறி பொடித்த சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த் தூள் மீதமுள்ள நெய், பிஸ்தா துருவல் சேர்த்து கிளறி மீண்டும் 5 நிமிடம் மைக்ரோவேவ் மீடியமில் வைக்கவும். ஒவ்வொருமுறை வைக்கும் போதும் இடையில் எடுத்து கிளறி வைக்கவும்

கடைசியாக வெளியில் எடுத்து நன்கு கிளறி நெய் தடவிய கிண்ணத்தில் கொட்டவும். சுவையான தக்காளி ஓட்ஸ் அல்வா தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply