டிவிடி சிடி ஆட்டோ பிளே

Loading...

டிவிடி சிடி ஆட்டோ பிளேசிடி அல்லது டிவிடியை அவற்றின் ட்ரேயில் போட்டவுடன் அதில் உள்ள பைல்களைக் கம்ப்யூட்டர் தேடிக் கண்டுபிடித்து இயக்கவா என்று கேட்கும் ஆட்டோ பிளே வசதியைப் பலர் விரும்பினாலும் பல வேளைகளில் இது ஒரு தேவையற்ற ஊடுருவல் என்றே பலராலும் கருதப்படுகிறது.

இந்த வசதி இயங்குவதனைத் தடுக்கவும் இயக்கவும் விண்டோஸ் இயக்கம் நம்மிடையே கண்ட்ரோலைத் தந்துள்ளது. இதற்கான சில செட்டிங்குகளைப் பார்க்கலாமா!

விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கி உங்கள் சிடி / டிவிடி ட்ரைவிற்கான எழுத்தைப் பார்க்கவும். பின் அதில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில் “Properties” என்பதைத் தேர்ந் தெடுத்து கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் “AutoPlay” என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப் அழுத்திக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் “Music Files,” “DVD Movie,” “Mixed Content” என்ற பிரிவு களில் எந்த வகை பைல்களை நீங்கள் இயக்க கூடாது என்று முடிவு செய்கிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலே குறிப்பிட்ட பைல் வகைகளுடன் வேறு சில வகைகளும் தரப்பட்டிருக்கும். வகையினைத் தேர்ந்தெடுத்தபின் அவை இயங்கவா? அல்லது தேவையில்லையா? என்ற விருப்பத்தினையும் அமைக்க வேண் டும் அல்லவா? “Actions” என்ற பிரிவில் உங்கள் விருப்பத்திற்கேற்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் எக்ஸ்பி இவ்வகை பைல் களை எப்போ தெல்லாம் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் தேர்ந்தெடுத்து அமைத்த செயல் பாட்டில் இயங்கும். “Prompt me each time to choose an action” என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்தால் விண்டோஸ் எக்ஸ்பி அவ்வகை பைல்களை இயக்கவா என்று கேட்கும். கேட்டு உங்கள் முடிவிற்கு டயலாக் பாக்ஸ் மூலம் காத்திருக்கும்.

எனவே சிடியைப் போட்டவுடன் பைல் தானாக இயங்காது. இன்னும் சில வகை பைல்களை இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வகை தேர்ந்தெடுப்பிற்குப் பின்னும் “Apply” என்பதனை அழுத்தி பின் ஓகே என்டர் தட்டவும். இந்த செட்டிங்ஸ் அமைத்தபின் நீங்கள் உங்கள் கண்ட்ரோலில் வைத்துள்ள வகை பைல் அடங்கிய சிடி ஒன்றை டிரைவில் செலுத்தி உங்கள் விருப்பம் சரியாகச் செயல்படுத்தப் படுகிறதா? என்பதனைப் பரிசோதிக்கவும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply