டயட் என்னும் பெயரில் பெண்கள் செய்யும் தவறுகள்!!!!

Loading...

டயட் என்னும் பெயரில் பெண்கள் செய்யும் தவறுகள்!!!!அதிகப்படியான ஆலிவ் எண்ணெய் உபயோகித்தல்

ஆலிவ் எண்ணெய் உடல் நலத்திற்கு நல்லது தான். ஆனால் நிறைய பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் அளவிற்கு அதிகமாக ஆலிவ் எண்ணெய்யை சேர்த்துக் கொள்கின்றனர், இது தவறான முறை என உடல் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் எடை குறையாது, அதிகம் தான் ஆகும்.

என்ன செய்ய வேண்டும்

1 டீஸ்பூன் அளவில் உபயோகிக்க வேண்டிய ஆலிவ் எண்ணெய்யை அதிகப்படியாக பயன்படுத்த வேண்டாம். அதனை அளவாகவே பயன்படுத்துங்கள்.

பழங்களை தவிர்ப்பது

சில பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் பெரும்பாலான சத்துமிக்க பழங்களையும், அதில் கொழுப்புச்சத்து இருக்கிறது என தவிர்த்து விடுகின்றனர். நம் உடலுக்கு அனைத்து சத்துகளும் தேவைப்படுகிறது என்பதை பெண்கள் உணர வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்

ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை மற்றும் தர்பூசணி போன்ற உணவுகள் உங்கள் உணவுக் கட்டுப்பாட்டிற்கும் நல்லது, உங்கள் உடல்நலத்திற்கும் நல்லது.

குறைந்த உணவு, நிறைய உடற்பயிற்சி

பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் செய்யும் மிகப்பெரிய தவறு, உடல் எடையை குறைக்கிறேன் என்று குறைவாக உணவு சாப்பிடுவது மற்றும் அதிகமாக உடற்பயிற்சி மேற்கொள்வது. நீங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள் எனில் அதற்கு ஏற்ப உணவை சாப்பிடுவதும் அவசியம்

என்ன செய்ய வேண்டும்

நீங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள் எனில், உங்களது உடற்பயிற்சி ஆலோசகரிடம் நீங்கள் செய்யும் பயிற்சிக்கு ஏற்ப எந்தெந்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply