ஜப்பானியரின் அழகின் இரகசியம். | Tamil Serial Today Org

ஜப்பானியரின் அழகின் இரகசியம்.

Loading...

ஜப்பானியரின் அழகின் இரகசியம்.எங்கள் அழகின் இரகசியம் ‘அக்குபஞ்சர்` சிகிச்சை’தான் என்று ஜப்பான் நாட்டினர் தெரிவித்துள்ளனர்.

அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வதை மறந்துவிடுங்கள், பழங்கால வைத்தியமான அக்கு பஞ்சர் சிகிச்சை செய்து கொண்டு அழகாக மாறுங்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தற்போது ஜப்பானில் அக்குபஞ்சர் சிகிச்சை பிரபலம் அடைந்து வருகிறது.

சீனாவில் இருந்து 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிகிச்சை முறை ஜப்பான் நாட்டுக்கு வந்தது என்று கூறுகின்றார்கள்.

ஆனால், இதன் ஆரம்பவடிவம் தமிழர்களிடமே இருந்துள்ளது. தோடு அணிவதில் இருந்து காவடி செதில் குத்துவதுவரை அக்குபஞ்சர்தான் என்பது பலருக்கும் புரிவதில்லை.

தற்போது ஜப்பானில் 40 ஆயிரம் பதிவு பெற்ற அக்குபஞ்சர் மருத்துவர்களும், 150க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களும் உள்ளன.

அழகு சாதனப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் உலகத்திலேயே 2ம் இடத்தில் உள்ள ஜப்பானியர்களே சமீப காலமாக அக்குபஞ்சர் பக்கம் திரும்பியுள்ளது, அழகை விரும்பும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Loading...
Rates : 0
VTST BN