சோளம் – பட்டாணி ரைஸ்

Loading...

சோளம் - பட்டாணி ரைஸ்தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – ஒரு கப்,
உதிர்த்த சோளம் – ஒரு கப்,
பச்சைப் பட்டாணி – ஒரு கப்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்,
கரம்மசாலா தூள் – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகத்தை வெடிக்க விடவும்.

• பிறகு, சோளம், பட்டாணி, அரிசி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, கரம்மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

• நன்கு வதங்கியதும், 5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். 3 விசில் வந்ததும், வெந்த சாத கலவையைக் கடாயில் கொட்டி எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடம் கிளறி, தயிருடன் பரிமாறவும்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN