சோயா தோசை

Loading...

சோயா தோசைசோயா – 2 கப்
புழுங்கல் அரிசி – ஒரு கப்
பச்சை பருப்பு – ஒரு கப்
பெருங்காயத்தூள் – ஒரு சிறிய ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
புதினா கீரை – ஒரு கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
உப்பு – 2 டீஸ்பூன்

சோயா, புழுங்கலரிசி, பச்சைபருப்பு, வெந்தயம் அனைத்தையும் தனித்தனியே ஊறவைக்கவும்.
7 அல்லது 8 மணி நேரம் ஊறிய பிறகு, சீரகம், 2 பச்சை மிளகாய், உப்பு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கிரைண்டரில் போட்டு தோசைமாவு பதத்திற்கு அரைக்கவும்.
பிறகு மீதி 2 பச்சை மிளகாய், புதினா இரண்டையும் நைசாக நறுக்கி அதில் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தோசையாக சுடவும்.
இதற்கு இட்லிப்பொடியோ, சட்னியோ சேர்த்து பரிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply