சோன் பப்டி

Loading...

சோன் பப்டிமைதா – 2 டேபிள் ஸ்பூன்
கெட்டி தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
ஜீனி – 1 கப் (Approx.200ml)
தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 5
பாதாம் – 5
பிஸ்தா – 5
கலர் தேங்காய் பூ (சிவப்பு, பச்சை)- 2 ஸ்பூன்

மைதா,கெட்டி தயிர், ஜீனி, தண்ணீர், பாதி நெய் இவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து, அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
மீதி நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கலவையில் சேர்க்கவும்.
பக்கங்களில் ஒட்டாமல் வரும்போது பிஸ்தா, பாதாம், முந்திரியை சிறு சிறு துண்டாக்கி கலக்கவும்.
சிறிது தளர இருக்கும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
அதன் மேலே கலர் தேங்காய் பூவை (சிவப்பு, பச்சை பூவை கலந்து) தூவி துண்டுகளாக்கவும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply