சைனீஸ் ரோல்ஸ்

Loading...

சைனீஸ் ரோல்ஸ்ரைஸ் பேப்பர் (18 c ) – 500 கிராம்
வெர்மிசெல்லி சோயா – 100 கிராம்
முளைக்கட்டிய பச்சை பயறு – 300 கிராம்
கேரட் – ஒரு கிலோ
கறுப்பு காளான் – 25 கிராம்
வெங்காயம் – ஒன்றரை
முட்டை – 3
ஃபிஷ் சாஸ் – ஒரு மேஜைக்கரண்டி
அஜினோமோட்டோ – ஒரு தேக்கரண்டி
உப்பு – ஒன்றரை தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் – ஒன்றரை தேக்கரண்டி
கோழி(அ)மாட்டு இறைச்சி(அ) இறால், நண்டு சதை – 300 கிராம்
சன் ஃபிளவர் ஆயில் – ஒரு லிட்டர்

இறைச்சியை கழுவி, எலும்பு நீக்கி மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வெர்மிசெல்லி சோயாவை சுடுதண்ணிரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி 2 இன்ச் நீளத்திற்க்கு கத்திரிகோலால் வெட்டிக்கொள்ளவும். (இந்த வெர்மிசெல்லி நரம்பைபோல் இருக்கும்.) கறுப்பு காளானையும் 10 நிமிடம் சுடுநீரில் போட்டு நீரை பிழிந்து மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துவைக்கவும்.

கேரட்டை நன்கு கழுவி, தோல் நீக்கி, துருவி அதில் உள்ள நீரை பிழிந்து கொள்ளவும்(கேரட் சாற்றினை வீணாக்காமல் ஜுஸாக அருந்தலாம்). வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முளைவிட்ட பயறை கழுவி நீரை வடிகட்டவும். பின்னர் நறுக்கின கேரட், வெங்காயம், வெர்மிசெல்லி, காளான், இறைச்சி, மிளகுத்தூள், பிஷ் சாஸ், அஜினோமோட்டோ இவை அனைத்தையும் ஒன்றாகப் போட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். உப்பையும் அத்துடன் சேர்த்து கலந்து வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முக்கால் பாகம் நீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் ரைஸ் பேப்பர் ஒன்றை எடுத்து, இரண்டு கைகளால் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, பாதியளவு பேப்பர் நீரில் நனையும்படி 30 விநாடிகள் பிடிக்கவும். பிறகு அதேபோல் மறுபாதி நனையுமாறு 30 விநாடிகள் பிடிக்கவும்.

இப்படி கொதிநீரில் நனைத்து எடுத்த பேப்பரை ஒரு தூய்மையான வெள்ளைத் துணியின் மீது விரித்து வைக்கவும். பிறகு அதன் ஒரு ஓரத்தில் கலந்து வைத்துள்ள பூரணத்தை ஒரு கரண்டியளவிற்கு வைக்கவும்.

படத்தில் காட்டியுள்ளவாறு பேப்பரின் இரண்டு ஓரங்களையும் உட்பக்கமாக மடிக்கவும்.

பின்னர் பூரணம் உள்ள அடிபாகத்தில் இருந்து மேல்நோக்கியவாறு உருட்டவும்.

இப்படியே அனைத்து பூரணத்தையும் ரோல்களாக சுருட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள ரோல்களைப் போட்டு வேகவிடவும்.

மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். பாத்திரத்தின் அளவைப் பொறுத்து, ஒருமுறைக்கு இத்தனை ரோல்ஸ் என்று போட்டு பொரித்தெடுக்கலாம்.

இரண்டு குச்சிகளைக் கொண்டு ரோல்ஸ்களை எடுத்து, எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போட்டு எண்ணெய்யை வடிக்கவும். இப்போது சுவையான சைனீஸ் ரோல்ஸ்(சைய்யோ) தயார்.

சாலட் இலைகளைக் கழுவி எடுத்து, அதன் நடுவில் சிறிது நறுக்கின புதினா, கொத்தமல்லி தழைகளை வைத்து, அத்துடன் சைனீஸ் ரோலையும் வைத்து இலையை சுருட்டிக்கொள்ளவும். இதற்கு ஃபிஷ் சாஸ் தொட்டுக்கொண்டு சாப்பிடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply