சோனி எக்ஸ்பீரியா Z5, எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

Loading...

சோனி எக்ஸ்பீரியா Z5, எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்சோனி நிறுவனம் அக்டோபர் 21ம் தேதி நிகழ்வு ஒன்றில், பிரீமியம் வரம்பிலான எக்ஸ்பீரியா Z5 டூயல், எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் டூயல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்திய சந்தையில் வெளிக்கொண்டுவரப்படாத புதிய எக்ஸ்பீரியா சாதங்களை இந்நிகழ்வில் பார்க்கலாம் என்று நிறுவனம் அழைப்பு விடுத்து உறுதிபடுத்தியுள்ளது.

சோனி Eshop இணையதளங்களின் பட்டியல் படி, எக்ஸ்பீரியா Z5, யுனைடெட் கிங்டமில் GBP 599 (சுமார் ரூ.60,600) விலையிலும், மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் யூரோ 699 (சுமார் ரூ. 51,700) விலையிலும் கிடைக்கும்.

4K தீர்மானம் கொண்ட எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் பொறுத்தவரை, இந்த சாதனம் யுனைடெட் கிங்டமில் GBP 699 விலையிலும், மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் யூரோ 700 விலையிலும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் வகைகள், இந்தியா விலையில் மேலே குறிப்பிட்டுள்ள விலை வரம்பில் சுற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய முன்னணி ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சமாக, சோனியில் கேமராவை மேம்படுத்தப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா Z5 ஸ்மார்ட்போனில் ஒரு பிராண்ட் புதிய 1/2.3 Exmor RS மற்றும் F/2.0 G லென்ஸ் கொண்ட 23 மெகாபிக்சல் சென்சார் பின்புற கேமரா கொண்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா Z5 டூயல்:

டூயல் சிம் ஆதரவு கொண்ட சோனி எக்ஸ்பீரியா Z5 டூயல் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. சோனி எக்ஸ்பீரியா Z5 டூயல் ஸ்மார்ட்போனில் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.20 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 200ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. இதனால் 4K வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களுக்காக கூடுதல் இடத்தை வழங்குகிறது. சோனி எக்ஸ்பீரியா Z5 டூயல் ஸ்மார்ட்போனில் f/2.2 aperture மற்றும் எல்இடி ஃபிளாஸ் கொண்ட 23 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, 4ஜி எல்டிஇ, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ்/எட்ஜ், NFC, 3ஜி, ப்ளூடூத் 4.1, ஜிஎஸ்எம், மைக்ரோ-யூஎஸ்பி மற்றும் 4ஜி எல்டிஇ ஆகியவை வழங்குகிறது. இதில் 2900mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 144 கிராம் எடையுடையது. இது ஒயிட், கிராஃபைட் பிளாக், கோல்டு, கிரீன் ஆகிய வண்ண வகைகளில் வருகிறது.

சோனி எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் டூயல்:

டூயல் சிம் ஆதரவு கொண்ட சோனி எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் டூயல் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. சோனி எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் டூயல் ஸ்மார்ட்போனில் 806ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 2160×3840 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.50 இன்ச் குவாட் ஹச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 (MSM8994) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 200ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. இதனால் 4K வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களுக்காக கூடுதல் இடத்தை வழங்குகிறது. சோனி எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் டூயல் ஸ்மார்ட்போனில் f/2.2 aperture மற்றும் எல்இடி ஃபிளாஸ் கொண்ட 23 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, 4ஜி எல்டிஇ, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ்/எட்ஜ், NFC, 3ஜி, ப்ளூடூத் 4.1, ஜிஎஸ்எம், மைக்ரோ-யூஎஸ்பி, FM ரேடியோ, DLNA மற்றும் MHL 3.0 ஆகியவை வழங்குகிறது. இதில் 3430mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 180 கிராம் எடையுடையது. இது குரோம், கோல்டு, பிளாக் ஆகிய வண்ண வகைகளில் வருகிறது.

சோனி எக்ஸ்பீரியா Z5 டூயல் ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:

டூயல் சிம்

பொது

வடிவம் காரணி: டச் ஸ்கிரீன்
எடை (கிராம்): 144
பேட்டரி திறன் (mAh): 2900
நீக்கக்கூடிய பேட்டரி: இல்லை
வண்ணங்கள்: ஒயிட், கிராஃபைட் பிளாக், கோல்டு, கிரீன்

டிஸ்ப்ளே

திரை அளவு: 5.20
டச் ஸ்கிரீன்: ஆம்
தீர்மானம்: 1080×1920 பிக்சல்கள்

ஹார்டுவேர்

ப்ராசசர்: குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810
ரேம்: 3ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 32ஜிபி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்
விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD
(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 200

கேமரா

பின்புற கேமரா: 23 மெகாபிக்சல்
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 5 மெகாபிக்சல்

சாஃப்ட்வேர்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப்

இணைப்பு

Wi-Fi 802.11 b/g/n
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ஜிபிஆர்எஸ்/எட்ஜ்
ப்ளூடூத் 4.1
3ஜி
மைக்ரோ-யூஎஸ்பி
FM ரேடியோ
ஜிஎஸ்எம்
4ஜி எல்டிஇ

சென்சார்கள்:

காம்பஸ்/மக்னேடோமீட்டர்
ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
அச்செலேரோமீட்டர்
அம்பிஎண்ட் லைட் சென்சார்
கைரோஸ்கோப்

சோனி எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் டூயல் ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:

டூயல் சிம்

பொது

வடிவம் காரணி: டச் ஸ்கிரீன்
எடை (கிராம்): 180
பேட்டரி திறன் (mAh): 3430
நீக்கக்கூடிய பேட்டரி: இல்லை
வண்ணங்கள்: குரோம், கோல்டு, பிளாக்

டிஸ்ப்ளே

திரை அளவு: 5.50
டச் ஸ்கிரீன்: ஆம்
தீர்மானம்: 2160×3840 பிக்சல்கள்
பிக்சல்ஸ் பெர் இன்ச் (PPI): 806

ஹார்டுவேர்

ப்ராசசர்: குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 (MSM8994)
ரேம்: 3ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 32ஜிபி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்
விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD
(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 200

கேமரா

பின்புற கேமரா: 23 மெகாபிக்சல்
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 5 மெகாபிக்சல்

சாஃப்ட்வேர்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்

இணைப்பு

Wi-Fi 802.11 b/ g/ n
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ஜிபிஆர்எஸ்/எட்ஜ்
ப்ளூடூத் 4.1
3ஜி
மைக்ரோ-யூஎஸ்பி
ஜிஎஸ்எம்
4ஜி எல்டிஇ
NFC
DLNA
MHL 3.0

சென்சார்கள்:

காம்பஸ்/மக்னேடோமீட்டர்
ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
அச்செலேரோமீட்டர்
அம்பிஎண்ட் லைட் சென்சார்
கைரோஸ்கோப்

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN