சேனைக்கிழங்கு பொடிமாஸ்

Loading...

சேனைக்கிழங்கு பொடிமாஸ்சேனைக்கிழங்கு – கால் கிலோ
மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சையளவு
எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – ஐம்பது கிராம்
கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – இரண்டு
பச்சை மிளகாய் – இரண்டு
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
உப்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
கொத்தமல்லி இலை – ஒரு டேபிள் ஸ்பூன்
வறுத்துப் பொடிக்க:
சீரகம் – கால் டீஸ்பூன்
சோம்பு – கால் டீஸ்பூன்

புளியை ஊற வைத்து கால் லிட்டர் தண்ணீரில் கரைத்து வைக்கவும். கிழங்கை மண் போகக் கழுவி சற்று பெரும் துண்டுகளாக நறுக்கி புளிக்கரைசலில் போட்டு வேக வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கியும் வரமிளகாயை கிள்ளியும் வைக்கவும்.
சீரகம், சோம்பை சிவக்க வறுத்து பொடிக்கவும். கிழங்கு வெந்ததும், இறக்கி நீரை வடித்து துண்டுகள் ஆறியதும் கையால் சிறிய துண்டுகளாகும்படி உடைக்கவும். (பிசையக் கூடாது)
உடைத்த கிழங்கில் மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, வரமிளகாய் போட்டு வறுத்து கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
கடுகு வெடித்து பருப்புகள் சிவந்ததும் பெருங்காயம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வாசனை வரவதக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து கிழங்குக் கலவையைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறிக் கொடுத்து பத்து நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply