செம்பருத்தி இயற்கை தந்த கொடை ! | Tamil Serial Today Org

செம்பருத்தி இயற்கை தந்த கொடை !

Loading...

செம்பருத்தி இயற்கை தந்த கொடை !செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.இந்த பூவின் காய்ந்த மொட்டுகளை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தல் என்றென்றும் கருமையாக இருக்கும்.அதுமட்டுமின்றி செம்பருத்தி பூவை உணவில் சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும்.மேலும் இதன் இலைகளை கொதிக்க வைத்து அருந்தினால் இரத்த அழுத்தம் சீராக இருப்பதுடன், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பட்சத்தில் இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும்.செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

Loading...
Rates : 0
VTST BN