செக்கனுக்கு 5GB வேகம் கொண்ட இணைய இணைப்பு

Loading...

செக்கனுக்கு 5GB வேகம் கொண்ட இணைய இணைப்புசமகாலத்தில் இணைய இணைப்பானது மனித வாழ்வில் இன்றி அமையாததாக மாறிவருகின்றது.
இதன் பயனாக இணையத் தொழில்நுட்பத்தில் பல்வேறு புரட்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இவற்றின் ஒரு அங்கமாக ஐக்கிய ராச்சியத்தில் இணைய சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களுள் ஒன்றான Gigaclear Trialing ஆனது 5GBPS வேகம் கொண்ட இணைய இணைப்பினை வழங்கவுள்ளது.

பரீட்சார்த்த ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இச் சேவையின் ஊடாக முதன் முறையாக 10,000 வீடுகளுக்கு இணைய இணைப்பு வழங்கப்படவுள்ளது.

தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வழங்கப்படும் இணைய இணைப்புக்களின் ஊடாக 1,500MB வீடியோ கோப்பு ஒன்றினை தரவிறக்கம் செய்வதற்கு 8 நிமிடங்கள் வரை எடுக்கும், இதனை மேற்குறித்த நிறுவனம் 2 நிமிடங்களில் தரவிறக்கம் செய்யக்கூடியதாக மேம்படுத்தியிருந்தது.

எனினும் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய இணைப்பின் ஊடாக குறித்த வீடியோ கோப்பினை தரவிறக்கம் செய்வதற்கு 6 செக்கன்களே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ் இணைப்பினை பொதுமக்கள் பெறுவதற்கு மாதாந்தம் 399 பவுண்ட்ஸ்களையும், வியாபர நிறுவனங்கள் 1,500 பவுண்ட்ஸ்களையும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply