சுவையான ஜவ்வரிசி – பாசிப் பருப்பு சுண்டல்

Loading...

சுவையான ஜவ்வரிசி - பாசிப் பருப்பு சுண்டல்தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு :

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

• முதலில் ஜவ்வரிசியை நன்றாக கழுவி மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

• பின்னர் பாசிப்பருப்பை வாணலியில் போட்டு லேசாக பொன்னிறமாக வரும் வரை வறுத்து, பின் அதில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

• பருப்பானது நன்கு வெந்ததும், நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

• பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

• பிறகு அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, குறைவான தீயில் உலர்த்த வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து ஒருமுறை கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

• இறுதியில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், ஜவ்வரிசி சுண்டல் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply