சுரைக்காய் பால் கூட்டு

Loading...

சுரைக்காய் பால் கூட்டுதேவையான பொருட்கள் :

சுரைக்காய் – பாதி
பெரிய வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 3
காய்ச்சிய பால் – அரை கப்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கடுகு, சீரகம் – தாளிக்க

செய்முறை:-

• சுரைக்காயையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

• பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள்.

• எண்ணெயைக் காய வைத்து அதில் கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

• அடுத்து சுரைக்காயை சேர்த்து தீயைக் குறைத்து மூடி வையுங்கள். அவ்வப்பொழுது திறந்து கிளறுங்கள்.

• சுரைக்காய் நன்கு வெந்ததும் பால் சேர்த்து, நன்கு கொதித்து சற்று சேர்ந்தாற்போல் வரும்பொழுது இறக்குங்கள்.

• சுவையான சுரைக்காய் பால் கூட்டு ரெடி. இதை சப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply