சுரைக்காய் தயிர் கறி | Tamil Serial Today Org

சுரைக்காய் தயிர் கறி

Loading...

சுரைக்காய் தயிர் கறிசுரைக்காய் – ஒன்று
வர மிளகாய் – 2
இலவங்கம் – 2
சீரகம் – ஒரு தேக்கரண்டி
சுக்கு பொடி – கால் தேக்கரண்டி
சோம்பு பொடி – அரை தேக்கரண்டி
கரம் மசாலா பொடி – அரை தேக்கரண்டி
தயிர் – ஒரு கப்
பெருங்காயம், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

தேவையான‌ பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

சுரைக்காயை தோலை நீக்கி சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

நறுக்கிய சுரைக்காயை ஒரு துணியிலோ அல்லது பேப்பர் டவலில் சுற்றி ஈரத்தை ஒத்தி எடுக்கவும். பிறகு எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்கம், பெருங்காயம், சீரகம் சேர்த்து பொரிய விடவும்.

பொரிந்ததும் பொரித்து வைத்துள்ள சுரைக்காயை சேர்க்கவும். அதனுடன் சோம்பு பொடி, சுக்கு பொடி, வர மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேக விடவும். தயிரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்.

தீயை மேலும் குறைத்து ஐந்து நிமிடம் வைத்து கொதிக்க விட்டு கடைசியாக கரம் மசாலா பொடியை தூவி இறக்கவும்.

சுவையான சுரைக்காய் தயிர் கறி ரெடி. இது ப்ளைன் ரைஸ், சப்பாத்தி, ரொட்டிக்கு நல்ல காம்பினேஷன்.

Loading...
Rates : 0
VTST BN