சுக்கு கஷாயம்

Loading...

சுக்கு கஷாயம்சுக்கு பொடி தயாரிக்க:
சுக்கு – 50 கிராம்
தனியா – 100 கிராம்
கிராம்பு – 10
சுக்கு கசாயம் தயாரிக்க:
சுக்கு பொடி – 4 தேக்கரண்டி
தண்ணீர் – 500 மில்லி
தூள் வெல்லம் – 2 மேசைக்கரண்டி

வாணலியில் தனியாவை போட்டு 3 நிமிடம் வறுக்கவும். கிராம்பை அதனுடன் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு சுக்கை நசுக்கி அதனுடன் போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

சுக்குப் பொடியை மொத்தமாக அரைத்து வைத்து தேவையான போது எடுத்துப் பயன்படுத்தவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சுக்கு, வெல்லம் மூன்றையும் போட்டு கொதிக்க விடவும்.

சுமார் 7 நிமிடம் கொதித்த பிறகு இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

அஜீரண கோளாறுக்கு இது சிறந்த மருந்து. அனைத்து தரப்பினரும் இதனை அருந்தலாம்.

அஜீரணக் கோளாறுக்கு இந்த சுக்கு கஷாயம் சிறந்ததொரு மருந்து. காலம் காலமாக பழக்கத்தில் உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply