சிவப்பு அவல் முளைகட்டிய பயறு உப்புமா

Loading...

சிவப்பு அவல் முளைகட்டிய பயறு உப்புமாதேவையான பொருட்கள்:

சிவப்பு அவல் – ஒரு கப்,
வேக வைத்த முளைகட்டிய பயறு – கால் கப்,
பச்சை மிளகாய் – 2,
வெங்காயம் – ஒன்று,
இஞ்சி – சிறிய துண்டு,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

• சிவப்பு அவலை கால் மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

• வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்கவும்.

• இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வேக வைத்த முளைகட்டிய பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

• பிறகு ஊற வைத்த அவல் சேர்க்கவும்.

• இதை நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும் (விருப்பப்பட்டால், அரை மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொள்ளலாம்).

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply