சிவப்பு அவல் பிடி கொழுக்கட்டை

Loading...

சிவப்பு அவல் பிடி கொழுக்கட்டைதேவையான பொருட்கள்:

சிவப்பு அவல் – அரை தம்ளர்
பாசிப்பருப்பு – கால் தம்ளர்
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சித்துருவல் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
கேரட் துருவல் – சிறிதளவு
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை முக்கால் பாகம் வேக வைக்கவும்.

கழுவிய கறிவேப்பிலையுடன் மிளகு, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அவலை தண்ணீரில் களைந்து 5 நிமிடம் ஊற விடவும்.

வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு, பெருங்காயம், சீரகம் போட்டு தாளித்து, இஞ்சித் துருவல், கேரட் துருவல், வேக வைத்த பாசிப்பருப்பு, ஊற வைத்த அவல், அரைத்த விழுது, மல்லித்தழை தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியாக கிளற இறக்கவும்.

ஆறிய பின் சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

சுவையாக சிவப்பு அவல் பிடி கொழுக்கட்டை தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply