சிறுநீர்த் தொற்றில் இருந்து விடுபட !

Loading...

சிறுநீர்த் தொற்றில் இருந்து விடுபட !சிறுநீர்த்தொற்று பலவகையான பிரச்னைகளுக்கு காரணமாகின்றது. குறிப்பாக, கோடையில் சிறுநீர் பிரச்னை பாடாக படுத்தி விடும். கவனமாக இல்லை என்றால், சிறுநீரகத்தில் கல், அழற்சி பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும். உதாரணமாக மகப்பேறு, பாலியல் உறவு,
உதரவிதானப் பயன்பாடு போன்றவற்றை பாதிக்கவும் வாய்ப்புண்டு. இவை மேலும் விருத்தியடைந்தால் சுக்கிலவழற்சி ஐயும் உருவாக்கும்.
மற்றும் சிறுநீர்கழித்தல் இலகுவாக இல்லாத சந்தர்ப்பத்தில் அதாவது சிறுநீர் பாதையில் ஏதேனும் அடைப்புக்கள் இருப்பின், சிறு நீர்வடி குழாயில் பழைய தொற்றுக்கள் விளைவாக ஏதும் சுருக்கங்கள் இருத்தல், போன்றவற்றாலும் இது ஏற்படலாம். மாறான கட்டமைப்பு ஏதும் இருப்பின் அது மேலும் சிறுநீர்ப்பை அலர்ஜியை அதிகரிக்கும்.
சிறுநீர்த் தொற்று எவ்வாறு கண்டறிவது?
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழித்தபின் சிறுநீர்ப்பை வெறுமையாக இருப்பினும் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுதல், அது போல் சிறுநீர் கழிக்கும் போது நோய் ஏற்படுவது, விரும்பத்தகாத மணத்துடன் மேகமூட்டம் போல் தெளிவற்று காணப்படும்.
இவ்வாறான அறிகுறிகளை வைத்து தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம்.
குழந்தைகளுக்கு சிறுநீர்ப்பை தொற்றிருப்பின் சிறுநீர் கழிக்கும் வேளைகளில் அடிவயிற்றில் நோவு ஏற்படும்.
சிலசமயம் சிறுநீருடன் ரத்தம் வெளியேறும் தன்மையும் காணப்படும்.
இத்தொற்றை சரிவர குணப்படுத்தாத நிலையில் அது வேறு சில நோய்க்கும் வழிவகுக்கும்.
மூலிகை குணப்படுத்த உதவுகின்றது சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் ஆன்டிபயோடிக் பயன்படுத்தலாம். இந்நிலை தொடருமாயின் அல்லது அடிக்கடி ஏற்படுமாயின் (அதாவது 2 மாதங்களுக்கு ஒரு முறை) மூலிகை வைத்தியரை நாடவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply