சிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி

Loading...

சிக்கன் தேங்காய்ப்பால் கிரேவிசிக்கன் – ஒரு கிலோ
முழு தேங்காய் ( சிறியது) – ஒன்று
பெரிய வெங்காயம் – 2 (பெரியது)
தக்காளி – 2 (பெரியது)
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
கலர் பவுடர் – கால் தேக்கரண்டி
எண்ணெய் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

வெங்காயம், தக்காளியை தனித் தனியாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும். அனைத்து பொடி வகைகளுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். தேங்காயை அரைத்து 2 கப் பால் எடுத்து வைக்கவும்.

சிக்கனை கழுவி சுத்தம் செய்து பொடி வகைகளை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி விழுதை சேர்க்கவும்.

தக்காளி வதங்கியதும் பிசறி வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வேக விடவும். சிக்கனில் இருக்கும் தண்ணீரே போதும் வேண்டுமெனில் சிறிது சேர்க்கலாம்.

சிக்கன் தண்ணீர் வற்றியதும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் மல்லி தழை சேர்த்து இறக்கவும்.

சுவையான சிக்கன் தேங்காய் பால் கிரேவி ரெடி. இது சாதம், சப்பாத்தி என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply