சாமை அரிசி மணி கொழுக்கட்டை

Loading...

சாமை அரிசி மணி கொழுக்கட்டைதேவையான பொருட்கள் :

சாமை மாவு – 1 கப்
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

• சாமை மாவை வெறும் கடாயில் லேசாக வறுத்து கொள்ளவும்.

• நீரை கொதிக்க வைத்து உப்பு கலந்து கொள்ளவும்

• இந்த நீரை மாவில் சிறிது சிறிதாக ஊற்றி மாவை நன்றாக மாவு பதம் வரும் வரை பிசைந்து 15 நிமிடம் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.

• அடுத்து மாவை சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

• வாணலிலியல் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் போட்டு வதக்கி வேக வைத்துள்ள உருண்டைகளை போட்டு சிறிது கிளறி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply