சாக்லேட் கேக்

Loading...

சாக்லேட் கேக்கேக் செய்ய:
மைதா – 1 3/4 கப்
கோகோ பவுடர் – 3/4 கப்
சர்க்கரை – 2 கப்
பேக்கிங் சோடா – அரை தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
முட்டை – 2
வெஜிடபிள் ஆயில் – அரை கப்
பால் – ஒரு கப்
வெனிலா எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி
சுடு நீர் – ஒரு கப்
சாக்லேட் ஃப்ராஸ்ட்டிங்(Frosting) செய்ய:
கோகோ பவுடர் – 2/3 கப்
பவுடர்ட் சுகர் – 3 கப்
வெண்ணெய் – அரை கப்
வெனிலா எசன்ஸ் – அரை தேக்கரண்டி
பால் – 1/3 கப்

கேக் செய்ய தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

கேக் செய்ய தேவையான (dry ingredients) மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் முட்டை, வெஜிடபிள் ஆயில், பால், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த கலவையை மாவு கலவையுடன் சேர்த்து கலக்கவும். இப்போது கொதிக்கும் சுடு நீர் சேர்த்து கொள்ளவும். கலவை தோசை மாவு பதத்தில்(நீர்க்க) இருக்க வேண்டும். கேக் கலவை தயார்.

கேக் ட்ரேயில் வெண்ணெய் தடவி, மைதா தூவி வைக்கவும். இந்த கேக் கலவையை, இரண்டு கேக் ட்ரேகளில் ஊற்றவும்.

அவனை 350 டிகிரி F க்கு முற்சூடு செய்யவும். பின்னர் 25 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். கேக்கின் மையத்தில் குத்தினால் டூத் பிக் கிளீனாக வர வேண்டும்.

பின் 10 நிமிடங்கள் கழித்து ட்ரேயிலிருந்து கேக்கை மெதுவாக வேறு ப்ளேட்டுக்கு மாற்றவும். இதை அப்படியே சர்வ் பண்ணலாம். விரும்பினால் ஃப்ராஸ்ட்டிங்கும் செய்து சர்வ் பண்ணலாம்.

சாக்லேட் ஃப்ராஸ்ட்டிங் செய்ய, ஒரு பாத்திரத்தில் கோகோ பவுடர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் வெண்ணெயை உருக்கி ஊற்றிக் கொள்ளவும்.

இதனுடன் பவுடர்ட் சுகர், பால், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு க்ரீம் பதத்தில் கலக்கவும். ஃப்ராஸ்டிங் செய்ய கேக் நன்கு ஆறி இருக்க வேண்டும்.

ஒரு ப்ளேட் அல்லது மைக்ரோவேவ் டர்ன்டேபிளில் ஃபாயில் பேப்பர் கொண்டு கவர் செய்து, அதில் கேக்கை வைத்து க்ரீம் பூசவும். அதன் மீது இன்னொரு கேக்கை வைத்து மீதியுள்ள க்ரீமை பூசவும். பக்க வாட்டிலும் க்ரீம் பூசவும்.

பின்னர் கேக்கை விரும்பியவாறு அலங்கரித்து, கட் பண்ணலாம்.

பரிமாறும் போது கேக்கின் மேலே செர்ரி அல்லது வெனிலா ப்ராஸ்டிங் வைத்து பரிமாறலாம். சுவையான டபுள் லேயர்ட் சாக்லேட் கேக்(double layered chocolate cake) தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply