சரும சுருக்கத்தை போக்குகிறது மஞ்சள்!

Loading...

சரும சுருக்கத்தை போக்குகிறது மஞ்சள்!மஞ்சளில் ஆன்டி-செப்டிக்,நோய் எதிர்ப்பு, அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அதில் குர்க்யூமின் என்னும் மஞ்சள் நிறமி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது.

• முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

• மஞ்சள் தூளில் கரும்புச்சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி வந்தால் சரும சுருக்கங்களை சரிசெய்யலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள். மஞ்சள் தூளில் மோர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• கடலை மாவில், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, குளிக்கும் போது ஈரமான சருமத்தில் தடவி நன்கு 5 நிமிடம் மசாஜ் செய்து குளித்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளுடன், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply