சப்பாத்தி

Loading...

download (4)கோதுமை மாவு – 2 கப்
சர்க்கரை – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
மாவு பிசைவதற்குத் தண்ணீர் – தேவையான அளவு

மாவை நன்கு சலித்து அதில் உப்பு, சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் எண்ணெய் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவான கலவையாகும்வரை நன்கு பிசையவும்.
பிசைந்த மாவின் மீது அரை தேக்கரண்டி எண்ணெய் தடவி 30 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
பிசைந்த மாவை எலுமிச்சை பழ அளவு உருண்டைகளாக உருட்டவும். மாவு உருண்டையைச் சிறிது மேல் மாவில் (கோதுமை மாவு அல்லது மைதா மாவு) தோய்த்து எடுத்து சப்பாத்திக் குழவியால் லேசாக சுமார் 8″ வட்டமாக இடவும். தோசைக்கல்லை நன்கு காய வைத்து அதன் மீது சப்பாத்தியைப் போட்டு வேக விடவும்.
சப்பாத்தி மீது அங்கங்கே கொப்புளங்கள் தோன்ற ஆரம்பித்ததும் அதைத் திருப்பிப் போட்டு இன்னொரு பக்கத்தையும் வேக விடவும்.
சாப்பாத்தியின் மீது செந்நிறப் புள்ளிகள் தோன்றியதும் கல்லிலிருந்து எடுக்கவும். விருப்பப்பட்டால் இரு புறமும் சிறிது நெய் விட்டு வேக வைத்து எடுக்கலாம். அதிக ருசியாக இருக்கும்.
இப்படியே ஒவ்வொரு சப்பாத்தியையும் சுட்டு எடுக்கவும். சூடாக இருக்கும் போதே குருமா, தால், மசாலா வகைகளுடன் சாப்பிடவும்.

உறுப்பினரது சமீபத்திய குறிப்புகள்

தேங்காய் துவையல்
கோபி மஞ்சூரியன்
பச்சைமிளகாய் சாம்பார்
பாகற்காய் குழம்பு
பருப்பு உருண்டை குழம்பு
மசால் வடை
சிக்கன் குழம்பு
ஃப்ரைட் ரைஸ்
பரங்கிக்காய் இனிப்பு கறி
சுறா மீன் புட்டு

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply