கோவைக்காயின் பயன்கள்- ஹெல்த் டிப்ஸ்

Loading...

கோவைக்காயின் பயன்கள்- ஹெல்த் டிப்ஸ்* கோவைக்காயில் உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை உள்ளது அத்துடன் அது உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது. அதற்கேற்ற பக்டீரியா எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. கோவைக்காய் உடலில் உள்ள அதிகபட்ச சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. தேவையற்ற உணவுப் பழக்கங்களால், வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தனிக்கும் தன்மை கொண்டது.
* ரத்தத்தைச் சுத்திகரிக்கும்:- பழமையான ஆயுர்வேத மருத்துவ நூல்களில் கோவைக்காயில் உள்ள சிறப்பு அம்சங்களை நம்து உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கோவைக்காயில் உள்ள மெட்டபாலிக் தன்மைகள் நமது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வுத் தன்மையை நீக்க அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சோர்வைப் போக்கவும், தரப்படுகிறது. எடையிழப்பு போன்ற ஊட்டச் சத்து குறைபாட்டால், ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் அளிக்கப்படுகிறது.
* இது எக்ஸிமா எனப்படும் சருமப் பிரச்சினையைக் குணப்படுத்த மருந்தாக அளிக்கப்படுகிறது.
* வாய்ப் புண்ணை -குறிப்பாக நாக்கில் ஏற்படும் புண்களை குணப்படுத்த இது உதவுகிரது.
* எடை குறைக்க உதவும்:- எடை குறைக்க விரும்புவோருக்கு உணவுடன் சாப்பிட ஏற்ற மிகச் சிறந்த காய் இதுவே. கோவைக்காயை மூலப் பொருளாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள், அதன் செடியிலிருந்து பெறப்பட்ட சாறுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply