கோதுமை வெல்ல தோசை | Tamil Serial Today Org

கோதுமை வெல்ல தோசை

Loading...

கோதுமை வெல்ல தோசைதேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப், அரிசி மாவு, வெல்லம் அல்லது கருப்பட்டி(பொடித்தது) – தலா அரை கப்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

• கருப்பட்டி அல்லது வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து, தோசை மாவை பதத்தில் கரைக்கவும்.

• அடுப்பில் சிறிது குழிவான நான்ஸ்டிக் தவாவைப் வைத்து சூடாக்கவும்.

• இதில் துளி எண்ணெயை தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்றி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்) மெல்லிய தோசையாக வார்க்கவும்.

• சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, சிவந்ததும் தோசையை திருப்பிப் போடவும். இருபுறமும் சிவந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN