கோதுமை லட்டு

Loading...

கோதுமை லட்டுகோதுமை மாவு – 2 கப்
சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய் – 3
முந்திரி – 10
திராட்சை – 10
நெய் – கால் கப்

கோதுமை மாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் கோதுமை மாவை போட்டு நிறம் மாறி வாசம் வரும் வரை வறுக்கவும். வாசனை வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை போட்டு சர்க்கரை பொடியாகும் வரை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் பொடி செய்து வைத்திருக்கும் சர்க்கரையை வறுத்து வைத்துள்ள கோதுமை மாவுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

கோதுமை சர்க்கரை கலவையுடன் மீதமிருக்கும் நெய்யை ஊற்றி கிளறி விடவும்.

அதனுடன் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை சேர்த்து கிளறவும். விரும்பினால் நெய்யின் அளவை குறைத்துக் கொண்டு சிறிது பால் சேர்த்தும் கிளறலாம்.

எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து சிறு சிறு ஊருண்டைகளாக பிடித்து வைக்கவும். சூடாக இருக்கும் போதே பிசைய வேண்டும் என்று அவசியமில்லை, சிறிது நேரம் ஆறியதும் நெய்யை கையில் தடவிக் கொண்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.

சுவையான கோதுமை லட்டு ரெடி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு மாலை நேரச் சிற்றுண்டி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply