கோதுமை ரவை பாயசம்

Loading...

கோதுமை ரவை பாயசம்தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை – அரை கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி – கால் கப்
பாதாம் – 10
திராட்சை – 25
ஏலக்காய்ப் பொடி – அரை டீஸ்பூன்
முதல் தேங்காய்ப் பால் – அரை கப்
இரண்டாம் பால் – ஒரு கப்
நெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை :

• கோதுமை ரவையை வெறும் வாணலியில் பொன்னிறமாகும்வரை வறுத்தெடுங்கள். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவையுங்கள்.

• முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள்.

• வெல்லத்தைக் கரையவிட்டு வடிகட்டி வேகவைத்த கோதுமை ரவையை அதில் சேர்த்துக் கலக்குங்கள்.

• இரண்டாம் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கொதிக்கவிடுங்கள்.

• பாயசம் போல வந்ததும் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி இறக்கிவையுங்கள்.

• வறுத்த பாதாம், திராட்சை, ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பரிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply