கோதுமை மாவு குழி பணியாரம்

Loading...

கோதுமை மாவு குழி பணியாரம்தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – முக்கால் கப்
இட்லி மாவு – ஒரு குழி கரண்டி
கோதுமை ரவை – ஒரு மேசை கரண்டி
முட்டை – ஒன்று
தேங்காய் துருவ‌ல் – கால் ட‌ம்ளர்
முந்திரி – இரண்டு மேசை கரண்டி (பொடியாக அரிந்தது)
உப்பு – ஒரு சிட்டிக்கை
வெல்ல‌ம் அல்லது கருப்பட்டி – முக்கால் டம்ளர் (பொடித்தது)
ஏலப்பொடி – அரை தேக்க‌ர‌ண்டி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

• வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும்.

• கோதுமை மாவில் இட்லி மாவு, கோதுமை ரவை, முட்டை, முந்திரி, உப்பு, ஏலப்பொடி, வடித்த வெல்லம் அனைத்தையும் போட்டு நன்கு கலக்கவும். கலவை கட்டியாக இருந்தால் தேவைக்கு தண்ணீர் ஊற்றி கலக்கி அரை மணி நேரம் ஊறவக்கவும்.

• குழிபணியார சட்டிய காயவைத்து கொஞ்சமாக எண்ணெய் விட்டு சூடானதும் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

• சுவையான சத்தான கோதுமை மாவு குழி பணியாரம் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply