கோதுமை பிரட் தக்காளி மசாலா

Loading...

கோதுமை பிரட் தக்காளி மசாலாதேவையான பொருட்கள் :

கோதுமை பிரட் – 15 ஸ்லைஸ்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – கால் கிலோ
கடுகு – ஒரு தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
கொத்தமல்லிதழை – சிறிதளவு
மிளகாய் வற்றல் – 10
தனியா – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• கோதுமை பிரட்டை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து வைத்துக் கொள்ளவும்.

• வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உப்பு இவற்றை போட்டு சிவக்க வறுத்து எடுத்து ஆறியவுடன் மிக்சியில் போட்டு பொடி செய்துக்கொள்ளவும்.

• ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

• அத்துடன் சிறிய வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும். அடுத்து தக்காளி, மஞ்சள் தூள் போட்டு கரண்டியால் நன்கு மசித்து வதக்கவும்.

• தக்காளி நன்கு மசிந்தவுடன் வறுத்த பொடி போட்டு நன்கு கிளறவும்.

• கடைசியாக இக்கலவையில் கோதுமை பிரட் துண்டங்களை போட்டு துண்டுகள் உடையாமல் கவனமாக பிரட்டி விட்டு இறக்கவும்.

• அகலமான பாத்திரத்தில் கோதுமை பிரட் மசாலாவை போட்டு அதன் மேல் கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply