கோக்கோ ரோல் சாக்லெட்

Loading...

கோக்கோ ரோல் சாக்லெட்கோக்கோ பவுடர் – ஒரு மேசைக்கரண்டி
பொடி செய்த சீனி – 5 மேசைக்கரண்டி
வெண்ணெய் – கால் கப்+ஒரு மேசைக்கரண்டி
மேரி பிஸ்கெட் – 13
பால் – அரை கப்

தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும். ஐசிங் சுகர் இருந்தால் அதனை பயன்படுத்தலாம். இல்லையெனில் சாதாரண சீனியை எடுத்து மாவாகப் பொடித்துக்கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் மேரி பிஸ்கெட்டை உடைத்துப் போட்டு, ஓடவிட்டு மாவாக பொடி செய்துக் கொள்ளவும்.

பொடி செய்த பிஸ்கெட்டுடன் கோக்கோ பவுடர், 2 மேசைக்கரண்டி பொடி செய்த சீனி சேர்த்து கலந்துகொள்ளவும்.

அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும். இந்த கலவை சற்று கெட்டியாக இருக்கவேண்டும். இளகிவிடக்கூடாது. அதனால் பாலை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும்.

மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதில் 3 மேசைக்கரண்டி சீனி சேர்க்கவும்.

இதனை கட்டியில்லாமல் 5 நிமிடம் கரண்டியால் நன்றாக கலக்கிக் கொள்ளவும். நன்கு இளகி கிரீம் போன்று வரும். அதுவரை கலக்கவும்.

பின்னர் சப்பாத்தி கட்டையில் ஒரு வெண்ணெய் பேப்பரை(butter paper) வைத்து அதன் மேல்புறம் முழுவதும் வெண்ணெய் தடவிக் கொள்ளவும். கோக்கோ கலந்து உருட்டி வைத்திருக்கும் உருண்டையை சப்பாத்தி கட்டையின் நடுவில் வைத்து சப்பாத்தி போல் தேய்க்கவும்.

நான்கு பக்கமும் சமமாக இழுத்து தேய்க்கவும். தேய்க்கும் போது மிகவும் மெல்லியதாக இல்லாமலும், தடிமனாக இல்லாமலும் பார்த்து தேய்க்கவும். பின்னர் அதன் மேலே கலந்து வைத்திருக்கும் கிரீமை பரவலாக பூசி விடவும்.

அதை அப்படியே ரோல் போல சுற்றவும். பின்னர் அதன்மேலே அந்த வெண்ணெய் பேப்பரையும் சுற்றி, ப்ரீஸரில் வைத்துவிடவும்.

சில மணி நேரங்களுக்கு பின்னர் சாக்லேட் கெட்டியாகிவிடும். அதன்பின்னர் அதை எடுத்து துண்டுகளாக வெட்டவும்.

இப்போது சுவையான கோக்கோ ரோல் சாக்லேட் தயார். இது செய்வதற்கு மிகவும் எளிமையானது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply