கொழுக்கட்டை பூரணங்கள்

Loading...

கொழுக்கட்டை பூரணங்கள்எள்ளு காரப் பூரணம்:
எள்ளு – அரை கப்
மிளகாய் வற்றல் – 3
உப்பு – கால் தேக்கரண்டி
எள்ளு இனிப்புப் பூரணம்:
எள்ளு – அரை கப்
அச்சு வெல்லம் – இரண்டு துண்டுகள்
தேங்காய் இனிப்புப் பூரணம்:
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
தூள் வெல்லம் – அரை கப்
ஏலக்காய்ப் பொடி – ஒரு தேக்கரண்டி

எள்ளுக் காரம், இனிப்பு இரண்டு செய்வதற்கும் எள்ளினை சிறிது நேரம், சுமார் கால் மணிநேரம் ஊற வைக்கவும்.

ஊறின பிறகு எடுத்து கழுவி சுத்தம் செய்து, நீரை வடித்துவிட்டு, காரம் செய்வதற்கு தேவையான அளவு எடுத்து ஒரு வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். அத்துடன் மிளகாய் வற்றலையும் சேர்த்துக் கொள்ளவும்.

இரண்டு நிமிடங்கள் வறுத்தப் பிறகு எடுத்து ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். மிகவும் மாவாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதுவே எள்ளுக் கார பூரணம்.

எள்ளு இனிப்புப் பூரணத்திற்கு மீதமுள்ள எள்ளை வெறும் வாணலியில் இட்டு லேசாக வறுத்து எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைக்கவும். பிறகு அதில் நுணுக்கிய வெல்லத்தைப் போடவும்.

இரண்டையும் ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். விரும்பினால் ஒரு ஏலக்காயைப் பொடித்து கடைசியாக சேர்த்துக் கொள்ளலாம். ஏலக்காயையும் சேர்த்து அரைத்தால் சுவை மாறிவிடும்.

அடுத்ததாக தேங்காய் பூரணத்திற்கு, துருவிய தேங்காய், நுணுக்கிய வெல்லம் இரண்டையும் ஒன்றாக வெறும் வாணலியில் போட்டு வேகவிடவும்.

தண்ணீர் சேர்க்காமல் கிளறிவிட்டு வேகவிடவும். வெல்லம் கரைந்து அந்தப் பாகிலேயே தேங்காய் ஒன்றாய் கலந்து வெந்துவிடும். சுமார் மூன்று நிமிடங்கள் அடிப்பிடிக்காவண்ணம் கிளறிவிட்டு வேகவைத்து இறக்கவும்.

சற்று ஆறினவுடன் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். பிறகு இவற்றை கொழுக்கட்டை மேல் மாவில் வைத்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply