கொள்ளு குழம்பு

Loading...

கொள்ளு குழம்புதேவையான பொருட்கள் :

கொள்ளு – 1 1/2 கப்
அன்னாசி பூ – 2
சோம்பு – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 1
தேங்காய் பால் – 1/2 கப்
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொள்ளுவை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அன்னாசி பூ,சோம்பு, மிளகு, வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். அதோடு தக்காளி சேர்த்து வதக்கவும்.

* உப்பு சேர்த்து, வேக வைத்த கொள்ளுவை கொட்டி 5 நிமிடம் வேக வைக்கவும்.

* அதில் தேங்காய் பால் சேர்க்கவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply