கேழ்வரகு வெஜிடபிள் புட்டு

Loading...

கேழ்வரகு வெஜிடபிள் புட்டுதேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – ஒன்றரை கப்,
பப்பாளி காய் துருவல், கேரட் துருவல், பீன்ஸ் துருவல் மூன்றும் சேர்த்து – ஒரு கப்,
தேங்காய் துருவல் – அரை கப்,
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• கேழ்வரகு மாவுடன் காய்கறி துருவல் உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசிறினால் தண்ணீர் தேவைப்படாது. காய்கறிகளில் இருக்கும் நீரே போதுமானது. தேவைப்பட்டால் சிறிது நீரைத் தெளித்து பிசிறி, 10 நிமிடம் நன்கு ஊறவிடவும்.

• பிறகு, புட்டு குழல் அல்லது புட்டு மேக்கரில் தேங்காய் துருவலை முதலில் சேர்க்கவும். பிறகு பிசறிய மாவை அடைத்து மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிட்டு கழித்து எடுக்கவும்.

• எண்ணெய் சேர்த்திருப்பதால் தொண்டையை அடைக்காது. காய்கறிகள் கலந்திருப்பதால் சைடு-டிஷ் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

• சுவையானது மற்றும் சத்தானது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply