கேரட் ஹல்வா

Loading...

கேரட் ஹல்வாகேரட் – கால் கிலோ
நெய் – 3 தேக்கரண்டி
வெல்லம் – 150 கிராம்
முந்திரி – தேவையான அளவு
திராட்சை – தேவையான அளவு

கேரட்டைத் தோல் சீவி ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் மிக்ஸியில் போட்டு மசித்துக் கொள்ளவும். வெல்லத்தைத் துருவி வைக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள‌ கேரட்டைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

அடிப்பிடிப்பது போல் இருந்தால் இடையிடையே நெய் சேர்க்கவும்.

வேக வைத்த கேரட் என்பதால் மீண்டும் நீண்ட‌ நேரம் வேக‌ வைக்க‌த் தேவையில்லை. சற்று சுருள‌ வந்ததும் துருவிய வெல்லம் சேர்த்துக் கிளறவும். (நான் இயற்கை வெல்லம் சேர்த்துள்ளேன். சாதாரண‌ வெல்லமாக‌ இருந்தால் பாகு காய்ச்சி சேர்க்கலாம்.)

பிறகு நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்தெடுத்து ஹல்வாவுடன் சேர்த்துக் கிளறவும்.

சுவையான‌ சத்தான‌ கேரட் ஹல்வா தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply