கேசரி கேக்

Loading...

கேசரி கேக்ரவை – ஒரு டம்ளர்
சர்க்கரை – ஒரு டம்ளர்
பட்டர் – ஐம்பது கிராம்
தண்ணீர் – 2 1/4 கப்
உப்பு – ஒரு பின்ச்
முந்திரி – ஐந்து
பாதாம் – இரண்டு
கருப்பு திராட்சை (கிஸ்மிஸ்பழம்) – எட்டு
நெய் – இரண்டு தேக்கரண்டி
அலங்கரிக்க – சிறிது (கிஸ்மிஸ்பழம்)

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு நாண் ஸ்டிக் தவாவில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே தவாவில் பட்டரை போட்டு உருகும் முன் ரவையை போட்டு அடிப்பிடிக்காமல் கிளறி விடவும்.

ரவையை வறுக்க ஆரம்பிக்கும் முன் மற்றொரு பாத்திரத்தில்
2 1/4 கப் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் நிறப் பொடி , ஒரு பின்ச் உப்பு மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.

ரவையை கருக விடாமல் லேசான பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

பொன்னிறமானதும் ரவையை ஒரு கையால் கிளறிக் கொண்டே மறுகையால் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி கிளறி விடவும். தீயை மிதமானதாக வைத்துக் கொள்ளவும்.

கொதித்த தண்ணீரை சேர்த்து கிளறிய பின்னர் சீனியை சேர்த்து கிளறி விடவும்.

ரவை மற்றும் சீனி ஒன்றாக சேர்ந்து கெட்டியான பதம் வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம், திராட்சையை சேர்த்து கிளறி இறக்கவும்.

கலவை சூடாக இருக்கும் போதே ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தி விடவும். ஆறியதும் டைமண்ட் வடிவ வில்லைகளாக வெட்டவும்.

சுவையான கேசரி கேக் ரெடி.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply