கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்யும் கற்றாழை!

Loading...

கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்யும் கற்றாழை!கூந்தல் வளர்ச்சிக்கு…

முடி உதிர்ந்து வழுக்கை அடையும் போது, அவ்விடத்தில் கற்றாழையின் ஜெல்லை தடவி மசாஜ் செய்து வந்தால், கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நொதிகளானது பாதிப்படைந்த மயிர்கால்களை புதுப்பித்து, முடியின் வளர்ச்சியை அவ்விடத்தில் தூண்டும்.

எனவே முடி அதிகம் உதிரும் போது, கற்றாழையின் ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்வது, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

பொடுகுத் தொல்லைக்கு…

கற்றாழையில் உள்ள நொதிகளானது பொடுகுத் தொல்லைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

அதற்கு கற்றாழை ஜெல்லில், சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கெமிக்கல் அதிகம் இல்லாத ஷாம்பு கொண்டு அலசினால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

எண்ணெய் பசையான கூந்தல் பிரச்சனைக்கு…

சிலருக்கு தலைக்கு எண்ணெய் பயன்படுத்தாமலேயே, எண்ணெய் வழியும். அப்படிப்பட்டவர்கள், பொடுகு நீக்குவதற்கு கூறப்பட்ட ஹேர் மாஸ்க்கை பின்பற்றினால், தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை குறையும்.

அரிக்கும் உச்சந்தலைக்கு…

கற்றாழை ஜெல்லானது ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பொருள் என்பதால், இதனை அரிக்கும் உச்சந்தலையில் பயன்படுத்தினால், அவை ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை நீக்கிவிடும். அதற்கு கற்றாழை செடியின் இலையில் இருந்து ஜெல்லை எடுத்து, நேரடியாக ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் அலசினால், அரிப்புக்கள் அடங்கி, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply