கூந்தல் பளபளக்க வேண்டுமா?

Loading...

கூந்தல் பளபளக்க வேண்டுமாகூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எத்தன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழிமுறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந் தலை பெறலாம். வறண்ட மற்றும் எண்ணெய்ப் பசை தன்மையுள்ள கூந்தலுக்கான சில டிப்ஸ்கள்..

வறண்ட கூந்தல்:

தலையில் எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே கூந்தல் வறட்சியடைகிறது. மேலும், அதிகமாக சூரிய கதிர்வீச்சிற்கு உட்படுதல், கடின தன்மையுள்ள ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் சில ரசாயன சிகிச்சை போன்றவற்றாலும் கூந்தலில் வறட்சி தன்மை உண்டாகிறது.

* வறண்ட கூந்தலுடையவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும். மேலும் மைல்டான அதாவது மிதமான தன்மையுடைய ஷாம்புக்களை பயன்படுத்தினால் கூந்தலின் வறட்சி தன்மை குறையும்.

* விளக்கெண்ணெய், கிளிசரின், வினிகர் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மிதமான ஷாம்புவுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தலின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.

* சிலருக்கு ஷாம்பு போட்டு குளிப்பதாலும் கூந்தல் அதிகப்படியாக வறண்டு காணப்படும். அப்படிபட்டவர்கள் தலைக்கு குளித்த பின் சிறிது பாலை தலையில் தேய்த்து நன்கு அலசிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் பட்டுப் போல மின்னும்.

* வறட்சியான கூந்தலை உடையவர்கள் ஹேர்-டிரையர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

எண்ணெய்ப் பசையான கூந்தல்:

தலையில் காணப்படும் எண்ணெய் சுரப்பிகள் அதிகளவில் சுரப்பதால், கூந்தல் எண் ணெய்ப் பசையுடன் காணப்படுகிறது. கூந்தல் எண்ணெய் தன்மையுடன் இருப்பதால், தூசு மற்றும் அழுக்கு போன்றவை எளிதில் சேர்ந்து விடும்.

* எண்ணெய்ப் பசையான கூந்தல் உடையவர்கள், அடிக்கடி தலைக்குக் குளிப்பதோடு, தலையில் தூசு மற்றும் அழுக்கு போன்றவை சேராமல் பராமரிக்க வேண்டும்.

* எண்ணெய்த் தன்மை கூந்தலுடையவர்கள் மருதாணி அல்லது எ<லுமிச்சை போன்ற பொருட்கள் கலந்த ஷாம்புக்களாக வாங்கி பயன்படுத்துவது நல்லது. * வேப்பிலைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க, தலையில் அதிகப்படியாக காணப்படும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கும். *கேரட்டை வேகவைத்து மசித்து, தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், எண்ணெய் பசை கட்டுப்படும். மேலும் எண்ணெய்ப் பசை கூந்தலுடையவர்கள் உணவில் எண் ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply