கூந்தல் ஏன் உதிர்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்

Loading...

கூந்தல் ஏன் உதிர்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்கூந்தல் என்பது பல்வேறு சத்துகளால் ஆனது. இந்தச் சத்துகள் புதுப்பிக்கப்பட்டால் தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக மாறும். ஒரு மாதத்தில் அரை இஞ்ச் அளவுக்குக் கூந்தல் வளர்வது இயல்பான கூந்தல் வளர்ச்சி சுழற்சி. வயதாக ஆக இது குறையும். கூந்தலுக்கு வயதாக ஆக, ஒரு கட்டத்தில் அது ஓய்வெடுக்கிற நிலைக்கு வந்து விடும்.

ரெஸ்ட்டிங் ஸ்டேஜ் எனப்படுகிற இதில், கூந்தலானது வளராமல் அப்படியே இருக்கும். இதன் விளைவாக கூந்தல் சீக்கிரமே உதிரும். மறுபடி வளராது. கூந்தல் மெலிவின் தீவிரத்தைப் பொறுத்தே கூந்தல் உதிர்வின் தன்மையைக் கணிக்க முடியும். வயதாகிற காரணத்தால் மட்டுமின்றி, கர்ப்ப காலம், ஊட்டமில்லாத உணவு, மண்டைப் பகுதியில் ஏற்படுகிற தொற்று, மருத்துவக் காரணங்கள், மன அழுத்தம், ஹார்மோன் மாறுதல்கள், பரம்பரைத் தன்மை மற்றும் சில வகை மருந்துகள் போன்றவற்றாலும் முடி உதிர்வும் மெலிவும் ஏற்படலாம்.

ஃபீமேல் பேட்டர்ன் ஹேர் லாஸ் (Female pattern hair loss) Di hydro testosterone (DHT) என்கிற ஹார்மோன் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சனை பாரம்பரியமாகத் தொடரக்கூடியது. ஃபாலிக்கிள் என சொல்லப்படுகிற கூந்தலின் நுண்ணறைப் பகுதி வரை ஊடுருவி, கூந்தலை மெலியச் செய்து, புதிதாக வளர்வதையும் தடுக்கக்கூடியது. சில பெண்களுக்கு இது மிக மிக மெதுவாக நடைபெறும். வேறு சிலரோ மிக வேகமாக மாற்றத்தை உணர்வார்கள். 35 வயதுக்கு மேலான 40 சதவிகிதப் பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது.

பெண்களுக்கு ஏற்படுகிற கூந்தல் உதிர்வானது, ஆண்களுக்கு ஏற்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒரு நபர் ஒரு நாளைக்கு 100 முடிகள் வரை இழக்கலாம். கூந்தல் என்பது பல்வேறு சத்துகளால் ஆனது. இந்தச் சத்துகள் புதுப்பிக்கப்பட்டால்தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக மாறும். கூந்தலில் புரதம், கொழுப்பு, நீர் மற்றும் கார்போஹைட்ரேட் எல்லாம் உண்டு. ஓட்ஸ், வெல்லம், ஈரல் மற்றும் முழு தானியங்கள் போன்றவை கூந்தல் உதிர்வைத் தடுக்கும் உணவுகள்.

வயதின் காரணமாக கூந்தல் உதிர்வும், மெலிவும் சகஜம் என்றாலும், சரியான ஊட்டம் நிறைந்த உணவுகள் கூந்தல் உதிர்வு மெலிவு மற்றும் வழுக்கைப் பிரச்சனைகளைத் தவிர்க்கும். காரணமே தெரியாமல் முடி உதிர்வு அல்லது முடி மெலிவு பிரச்சனைகளை உணர்பவர்கள் உடனடியாக ஒரு ட்ரைகாலஜிஸ்டை அணுகிக் காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply