கூந்தல் ஆரோக்கியமாக இருக்க இரவில் படுக்கும் போது செய்ய வேண்டியவைகள்!!!

Loading...

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க இரவில் படுக்கும் போது செய்ய வேண்டியவைகள்!!!முடியை கட்ட வேண்டாம் தினமும் நாள் முழுவதும் முடியை கட்டிக் கொண்டு இருந்தால், இரவில் படுக்கும் போது, முடியை லூசாக விட்டு தூங்குங்கள்.

ஏனெனில் நாள் முழுவதும் கட்டியவாறு இருந்ததால், மயிர்கால்களால் சரியாக சுவாசிக்க முடியாமல், அதன் ஆரோக்கியம் அழியும்.

ஆகவே இரவில் படுக்கும் போது ப்ரீ ஹேர் விட்டு தூங்கினால், மறுநாள் காலையில் கூந்தல் நன்கு புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக காணப்படும்.

தலை சீவுங்கள்

எப்போதுமே இரவில் படுக்கும் முன், சீப்பு கொண்டு ஒருமுறை தலையை சீவ வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

ஸ்கால்ப்பை மசாஜ் செய்யவும்

இரவில் படுக்கும் முன், கை விரல்களால் ஸ்கால்ப்பை சிறிது நேரம் மசாஜ் செய்து விட வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மன அழுத்தம், தலை வலி போன்றவையும் நீங்கும்.

எண்ணெய் தடவவும்

தினமும் இரவில் ஸ்கால்ப்பிற்கு சிறிது எண்ணெய் தடவ வேண்டும். குறிப்பாக கோடையில் இந்த செயலை தவறாமல் செய்ய வேண்டும். இதன் உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply