குளிர்பான பிரியரா நீங்கள்? காத்திருக்கும் பேராபத்து

Loading...

drinks_002கியாஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்களை அருந்தினால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தண்ணீரை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது குளிர்பானம் தான்.

சோர்வு ஏற்பட்டாலோ, விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ குளிர்பானத்தை அருந்துகிறோம், ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள் ஒன்றல்ல.

இந்நிலையில் கியாஸ் நிரப்பப்பட்ட சோடா மற்றும் குளிர்பானங்களால் இதய நோய்கள் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

சுவீடன் நாட்டை சேர்ந்த மருத்துவ குழுவொன்று கடந்த 12 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

12 ஆண்டுகளாக தொடர்ந்து தினமும் கியாஸ் நிரப்பப்பட்ட குளிர்பானம் குடிக்கும் 12,000 பேரை ஆய்வுக்கு எடுத்து பரிசோதித்தனர், அவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் இவற்றை அருந்துவதால் 23 சதவீதம் இதய பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply