குளிர்காலத்திற்கு ஏற்றவாறு மேக்கப் செய்ய சில குறிப்புக்கள்

Loading...

குளிர்காலத்திற்கு ஏற்றவாறு மேக்கப் செய்ய சில குறிப்புக்கள்குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. குளிர்காலத்தின் தட்பவெப்பத்திற்கு ஏற்றவாறு சருமமும் மாற்றம் பெறுகிறது. சருமத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு நாம் போடும் மேக் அப் ஸ்டைலையும் மாற்ற வேண்டும். அப்போது தான் முகம் பளிச்சென்றும், அழகாகவும் இருக்கும். ஆகவே இங்கு சில குளிர்கால மேக் அப் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!
ஈரப்படுத்தி சுத்தப்படுத்துதல்
சருமம் வறண்டு போகாமல் இருக்க வேண்டுமெனில், அதனை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். இல்லையேல் சருமம் வறண்டு தோல் உரிந்து விட ஆரம்பித்துவிடும். மேலும் சருமம் ஈரப்பதத்துடன் இருந்தால் தான் மேக் அப் குறைபாடற்று தெரியும்.
பேஸ் அல்லது ஃபவுண்டேஷன் க்ரீம் வகை
ஃபவுண்டேஷன்களை உபயோகப்படுத்த வேண்டும். ஒரு ஷேட் உபயோகப்படுத்துவதை காட்டிலும், சரும டோன்னிற்கு ஏற்றவாறு இரண்டு அடுத்தடுத்த ஷேட்களை உபயோகப்படுத்தவும்.
கண்கள்
குளிர்காலத்தில் கண்களுக்கு மேக் அப் போடும் போது தங்க நிறம் அல்லது உலோக நிறங்களை பயன்படுத்தவும். ஏனெனில் அது தான் கம்பீரமாக காட்டும். மேலும் மாலை நேர பார்ட்டிகளுக்கு செல்வதாக இருந்தால், கண்களின் ஓரங்களில் மெலிதாக ஷேட் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக காஜல், லைனர், மஸ்காரா கண்டிப்பாக போட்டு கொள்ள வேண்டும்.
உதடுகள்
குளிர் காலத்தில் லிப் க்ளாஸ் உபயோகப்படுத்தி உதட்டில் பளபளப்பு ஏற்றிக் கொள்ளலாம். உதடு ஈரப்பதத்துடன் வெடிப்பு ஏற்படாமல் இருக்க லிப் பாம் அவசியம் பயன்படுத்த வேண்டும். அதிலும் டார்க் நிற லிப்ஸ்டிக் உபயோகித்தால் தான் முகம் பிரகாசமாக தெரியும். பிளஷ் (Blush) தாடை பகுதிகளில் பிளஷ் பூசி கொள்ள வேண்டும். ஏனெனில் அது முக அழகை எடுப்பாக காட்டும்.
கூந்தல்
சருமத்திற்கும் சரி, கூந்தலுக்கும் சரி குளிர்காலத்தில் அதிக அக்கறை எடுத்து கொண்டே ஆக வேண்டும். எனவே வெந்நீர் உபயோகப்படுத்தாமல் வெதுவெதுப்பான நீர் உபயோகப்படுத்துவதே சிறந்தது. க்ரீம் வகை காஸ்மெடிக்ஸ் தான் பயன்படுத்த வேண்டும். கூந்தலையும் கண்டிஷன் செய்தல் அவசியம். மேலும் கூந்தல் எண்ணெய் பசையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் கூந்தல் குளிர் காலத்தில் அதிகம் வறண்டு போகும். மேற்கண்ட குறிப்புகளை புரிந்து, இதன் படி மேக் அப் போட்டால் சருமம் பிரகாசமாகவும், அழகாகவும் இருப்பது நிச்சயம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply