குலாப் ஜாமூன்

Loading...

குலாப் ஜாமூன்பால் பவுடர் – 2 1/2 கப்
பால் – தேவையான அளவு (கலப்பதற்கு)
நெய் (அ) டால்டா – 2 மேசைக்கரண்டி
சர்க்கரை – 5 கப்
பேக்கிங் பவுடர் – சிறிது
மைதா மாவு – 2 மேசைக்கரண்டி
நெய் (அ) எண்ணெய் – அரை கப் (பொரிப்பதற்கு)

பால் பவுடருடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், நெய் (அ) டால்டா சேர்த்து, தேவைக்கேற்ப பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 5 கப் சர்க்கரையைப் போட்டு, அத்துடன் 5 கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் காயவிடவும். காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும். அனைத்து உருண்டைகளையும் போட்ட பிறகு, 5 நிமிடங்கள் கழித்து பாகு இருக்கும் அடுப்பை அணைக்கவும்.

டேஸ்டி குலாப் ஜாமுன் ரெடி. குறைந்தது 3 – 4 மணி நேரம் வரை குலாப் ஜாமூன் பாகில் ஊற வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply