குட்டீஸ்க்கு கண் பிரச்சினை இருக்கா?

Loading...

குட்டீஸ்க்கு கண் பிரச்சினை இருக்காபள்ளி செல்லும் குழந்தைகள் திடீரென பார்வை மங்கிப்போய் தலையைப் பிடித்துக்கொண்டு அமரும் போதுதான் அவர்களுக்கு கண்பார்வையில் கோளாறு என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் உணர ஆரம்பிக்கின்றனர்.

பார்வை கோளாறு ஏற்பட்டபின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட நோய் வரும் முன் அதற்கு ஏற்ப பயிற்சிகளை மேற்கொண்டால் குழந்தைகளை கண்பார்வை கோளாறுகளில் இருந்து பாதுகாக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

எப்படி கண்டறிவது?

இன்றைக்கு தொலைக்காட்சி, கம்யூட்டர் பார்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதனால பள்ளி செல்லும் குழந்தைகளில் 4 முதல் 5 சதவீதம் வரை பார்வைக் குறைபாடுகள் இருக்கின்றன.

சில குழந்தைகள் கரும்பலகை, தொலைக்காட்சி ஆகியவற்றை அருகில் சென்று பார்க்கின்றனர். புத்தகத்தை முகத்துக்கு அருகில் வைத்துப் படிக்கின்றனர்.

கண்களை சுருக்கிப் படிக்கும் போதுதான் அவர்களுக்கு பார்வைக்குறைபாடு இருக்கிறது என்பதையே கண்டறியமுடிகிறது. இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தெரிந்தால் உடனே கண் மருத்துவரிடம் செல்வது நல்லது.

கண்ணுக்கு பயிற்சி

குழந்தைகளுக்கு கண்பார்வை கோளாறுகள் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். ஒரு இடத்தில் குழந்தைகளை அமரவைத்து இரண்டடி தூரத்தில் பல நிறங்களில் உள்ள பென்சில்களை வைக்கவேண்டும்.

நிறத்தைக் கூறி அந்த கலர் பென்சிலை சரியாக எடுக்கச் சொல்ல வேண்டும். இதேபோல் பென்சிலின் நிறங்களை இடம் மாற்றி வைத்து நிறங்களை கூறி எடுக்கச் சொல்லலாம். இதனால் நிறம் பற்றிய பிரச்ச்சினைகள் இருந்தால் எளிதில் அதை கண்டறியலாம்.

கண்பார்வை கோளாறுகளை சரி செய்ய குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்கலாம். கண்களை உள்ளங்கையினால் மூடிக்கொண்டு இட வலமாக கண்களை சுழற்றச் சொல்லாம்.

கண் பரிசோதனை

கண்புரை என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, பிறந்த குழந்தைக்கும் ஏற்படலாம்! கண்களில் அடிபடும்போதும் கண்புரை ஏற்படும். கண்புரையை கண்டறிந்தால், உடனே அறுவை சிகிச்சை செய்வது அவசியம். இல்லாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தைகளை பள்ளி செல்வதற்கு முன்பு, ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply