குட்டி பன் சாண்ட்விச்

Loading...

குட்டி பன் சாண்ட்விச்குட்டி பன் – 12
முட்டை – 3
மட்டன் கீமா – 50 கிராம் (சுருட்டியது)
உப்பு தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
பட்டர் – பன் பொரிக்க தேவையான அளவு
எண்ணெய் – முட்டை பொரிக்க தேவையான அளவு

கீமாவை கழுவி சுத்தம் செய்து கால் தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து நன்கு சுருட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சுருட்டி வைத்திருக்கும் கீமா, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். முட்டை நன்கு கீமாவுடன் சேரும்படி அடிக்கவும்.

குட்டி பன்னை இரண்டாக நறுக்கி அதில் லேசாக பட்டர் தடவி பேனில் போட்டு கருகவிடாமல் சிவக்க டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.

அடித்து வைத்திருக்கும் முட்டையை குட்டி குட்டியாக பன் அளவிற்கு ஊற்றி மேலே பட்டர் மற்றும் எண்ணெய் கலந்து ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

குட்டி பன் சாண்ட்விச் செய்ய பொரித்த முட்டை மற்றும் டோஸ்ட் செய்த குட்டி பன் தயார்.

குட்டி பன்னின் இரு புறங்களிலும் புதினா சட்னி அல்லது கெட்சப் தடவி நடுவில் முட்டையை வைத்து பரிமாறவும். சுவையான குட்டி பன் சாண்ட்விச் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply